ஒரிசாவில் பந்த்
புவனேஸ்வர் (ஒரிஸ்ஸா):
பீகார் மாநிலத்தில் உள்ள சரிகேலா, காராசுவான் ஆகிய பகுதிகளை ஒரிஸ்ஸா மாநிலத்தில் சேர்க்கக் கோரி இரு அமைப்புகள் விடுத்திருந்த பந்த் அழைப்பிற்குஒரிஸ்ஸாவில் ஓரளவு ஆதரவு இருந்தது.
உத்கல் சம்மியாலினி மற்றும் பிஸ்வ ஒரிய சம்மியாலினி ஆகிய இரு அமைப்புகளும் இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள்ஆதரவு கொடுத்திருந்தன.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த பந்த்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதரவு இருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. நீண்ட தூரரயில்கள் பல ரயில் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன.
சில இடங்களில் கல்வீச்சும், சாலை மறியலும் இருந்தது. இருப்பினும் பெரிய அளவில் வன்முறைச் சம்பவம் ஏதும் இல்லை. தலைநகர் புவனேஸ்வரில் பந்த்முழுமையாக இருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications