கோவை சிறைக்கு மாறுகிறார் பாஷா
கோவை:
கோவை தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா பாஷாவை கோவை சிறைக்கு மாற்றநீதிபதி உத்தரவிட்டார்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 167 பேரும் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்புக்கிடையே கோவைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆஜர்படுத்தப்பட்ட 167 பேரில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியும் அடங்குவர்.
இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி தணிகாசலம், தமிழில் உள்ள குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்கிக்கொள்கிறீர்களா என்றுகேட்டார். அதற்கு அவர்கள் சரி என்று கூறிவிட்டு 16, 446 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்கிக் கொண்டனர்.
வழக்கில் முக்கிய எதிரியான அல்உம்மா இயக்கத் தலைவர் பாஷா கூறுகையில், நான் உள்பட 57 பேரும் இன்னும் வக்கீல்களை நியமித்துக்கொள்ளவில்லை. மேலும் நான் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுடன்விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை.
இந்த வழக்கு குறித்து மீண்டும் ஒரு முறை விசாரிக்கவேண்டும். மேலும் அரசு எங்களுக்காக வக்கீல்களை நியமிக்க வேண்டும். என்னை கோயம்புத்தூர்சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நீதிபதி தணிக்காசலம் பாஷாவை கோவை சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாஷா உள்பட 57 பேருக்கு அரசுத் தரப்புவக்கீலை நியமிக்கும்படியும் உத்தரவிட்டார். பின்னர் இவ்வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, எதிரிகள் தரப்பு வக்கீல், மதானி, ராஜூ மற்றும் கேரளாவைச் சேர்ந்த 7 பேர்களை ஜாமீனில் விடக்கோரி ஆகஸ்ட் 8 ம் தேதிமனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications