ஜாதிதான் இனி அரசியலை நிர்ணயிக்கும் ..."
கோவை:
வருங்காலத்தில் ஜாதி அடிப்படையிலான கட்சிகள் தான், தமிழக அரசியலை முடிவு செய்யும் என திருப்பூரில்கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவைத் தலைவர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
திருப்பூரில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் முதல்மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலையில் ஊர்லவம் நடந்தது. 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறைந்திருந்தன. பேரணியை தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும் கவுண்டர்கள் பேரவையின் தலைவருமான ஆடிட்டர் பாலசுப்ரமணியம் துவக்கிவைத்தார்.
பேரணிக்கு பின்னர் நடந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் துவக்க உரையாற்றினார்.பேரவைத் தலைவர் ஜீப்ரா பழனிச்சாமி தலைமை வகித்தார்.
கூட்டம் துவங்கும் முன்னர் நிருபர்களிடம் பாலசுப்ரமணியம் பேசுகையில், தமிழ்நாட்டில் கவுண்டர்களின்சங்கங்கள் மூன்று பிரிவாக செயல்பட்டு வருகின்றன. இதனை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.விரைவில் இவை அனைத்தும் ஒன்றுபட்டு இயங்கும். தமிழகத்தில் 30 சதவீத ஓட்டுகளை கவுண்டர்கள் சமுதாயம்கொண்டுள்ளது.
வருங்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியை ஜாதி அடிப்படையிலான கட்சிகள் தான் தீர்மானிக்கும். திருப்பூரில் நடந்தஇந்த பேரணி மூலம், தமிழ் தேசியக் கட்சியின் வலிமை உணர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications