இந்திய வீரர்கள் சுட்டு 4 பாக். வீரர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நெளஷாரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத்தாண்டி, போலீஸ் செக்போஸ்ட் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவவீரர்கள் மீது இந்திய வீரர்கள் சுட்டதில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் செத்தனர்.

புதர்கள், செடிகளின் மறைவில் இருந்தபடி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிளால்சுட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதுதம் மலைகளால் சூழப்பட்டது. இதனால் முதலில்பாகிஸ்தான் வீரர்கள் வருவது இந்திய வீரர்களுக்குத் தெரியவில்லை.

கல்சியான் போஸ்ட் பகுதியை நோக்கி பாகிஸ்தான் வீரர்கள் தவழ்ந்தபடி வந்துள்ளனர்.இந்தப் பகுதி ஜம்முவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப்பகுதியில் வைத்துத்தான் பாகிஸ்தான் வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள்அறிந்தனர்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் வீரர்கள் வந்து விட்டதையறிந்த இந்திய வீரர்கள்நெளஷாரா போஸ்ட்டை பாகிஸ்தான் வீரர்கள் குறி வைத்துள்ளதை உணர்ந்துகொண்டனர். இதையடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் நான்கு பாகிஸ்தான்வீரர்கள் அங்கேயே செத்தனர்.

செத்த வீரர்களில் மூன்று பேருடைய உடல்களை பிற வீரர்கள் தங்களது பகுதிக்குஇழுத்துச் சென்றனர். ஒரு உடலை மட்டும் அவர்களால் எடுத்துச் செல்லமுடியவில்லை. அந்த உடல் இந்திய எல்லைக்குள்தான் இன்னும் உள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதே பாகிஸ்தானியர்களின்திட்டம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள்நினைத்தபடி தீவிரவாதத்தில் ஈடுபட முடியாததால், இப்படிச் செய்து திருப்தி அடையநினைக்கின்றனர் பாகிஸ்தான் வீரர்கள் என்றார் அவர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தம் ஆறு முறை இப்பகுதியில் பாகிஸ்தான்வீரர்கள் வாலாட்டியுள்ளனர். இதில் இரண்டு இந்திய வீரர்கள் இறந்துள்ளனர்.பாகிஸ்தான் வீரர்களில் 15 பேரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+