காட்டுக்குச் சென்றார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும்மீட்பதற்காக அரசுத் தூதர் கோபால் இரண்டாவது முறையாக புதன்கிழமை இரவு காட்டுக்குச் சென்றார்.
நடிகர் ராஜ்குமாருக்காக அவரது மகன்கள் கொடுத்த மருந்துகள், கேசட்டுகள் ஆகியவற்றை அவர் தன்னுடன்எடுத்துச் சென்றார்.
ராஜ்குமார் குடும்பத்தார் கொடுத்தனுப்பிய கேசட்டில், நாங்கள் அனைவரும் நலம். நீங்கள் இல்லாதது மிகப் பெரியகுறை. உங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் உடல் நலத்தை நன்றாகக்கவனித்துக் கொள்ளுங்கள் என்று ராஜ்குமார் குடும்பத்தார் கூறியுள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வியாழக்கிழமையுடன் 18 நாட்களாகின்றன. இவர்களை விடுக்கவேண்டுமென்றால் இருமநில அரசுகளும் தனது 14 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனைவிதித்துள்ளான் வீரப்பன்.
இந்தக் கோரிக்கைகளில் கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளை விடுவிக்க வேண்டும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது வீரப்பனின் முக்கியக்கோரிக்கைகள்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் காட்டுக்குச் செல்லும் கோபால் தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார். அவருடன் நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், சுப்பு, பாலமுருகன் ஆகியோரும் உடன்சென்றுள்ளனர்.
முன்னதாக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய கோபால் இந்த முறை வெற்றியுடன் திரும்புவேன் என்றுகூறி விட்டுச் சென்றார்.
புதன்கிழமை இரவு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற இவர்கள் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமைகாலை காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் கோரிக்கைகளை நிறைவேற்றவீரப்பன் விதித்த கெடு சனிக்கிழமையுடன் முடிகிறது.
அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் எடுத்துள்ள நடவடிக்கைகள் வீரப்பனுக்கு திருப்திஅளித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராஜ்குமார் மற்றும் மற்றவர்களின் கடத்தல் விவகாரம்இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications