பச்சிளம் பேரன் குடித்ததால் பாட்டி மீது வழக்கு
வார்சா:
பிறந்து 20 மாதமே ஆகும் சிறுவனின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அபாய கட்டத்தில்இருப்பது தெரிய வந்ததால், அலட்சியமாக இருந்ததாக அவனது பாட்டி மீது போலந்துநாட்டுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்தர் என்ற சிறுவன் பிறந்து 20 மாதமே ஆகிறது. இவனது பாட்டியைத் தற்போதுபோலீஸார் கைது செய்துள்ளனர். ஆர்தரின் ரத்தத்தில் அபாய கட்டத்தில் ஆல்கஹால்இருப்பது டாக்டர்கள் நடத்திய ஒரு பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்துஅலட்சியமாக இருந்ததாக ஆர்தர் பாட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் பாட்டி இந்தப் புகாரை மறுத்துள்ளார். பார்ட்டி ஒன்றிற்குச் சென்றிருந்தபோது,அங்கு குடித்து விட்டு மீதமிருந்த மதுவை ஆர்தர் தானாகவே எடுத்துக் குடித்ததாகஅவர் கூறுகிறார்.
எப்படியோ, பேரன் குடித்ததற்காக தொடரப்பட்ட வழக்கு நிரூபிக்கப்பட்டால்பாட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைவாசம் நிச்சயம்.












Click it and Unblock the Notifications