விமானத்தைக் கடத்தி .. கிராமத்தில் இறங்கி .. பணத்துடன் தப்பிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

சியோ பாலோ (பிரேசில்):

பிரேசில் நாட்டு விமானத்தைக் கடத்திய 8 பேர் குண்ட கும்பல், ஒரு கிராமத்தில் விமானத்தை தரையிறக்கி தாங்கள் வைத்திருந்த பணப் பையுடன் தப்பிச்சென்றனர்.

கடத்தப்பட்ட போயிங் விமானத்தில் 66 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் இருந்தனர். அர்ஜென்டினா எல்லைப் பகுதி அருகிலுள்ள சுற்றுலாத்தலமானபோஸ் டி இகுவாகோ பகுதியிலிருந்து கியுரிடிபா என்று இடத்திற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. அங்கிருந்து விமானம் தலைநகர் ரியோடிஜெனிராவுக்குச் செல்ல வேண்டும்.

விமானம் சென்று கொண்டிருந்தபோது, 8 பேர் கொண்ட கும்பல் ஆயுத முனையில், விமானத்தைக் கடத்தியது. பின்னர் அக்கும்பல் விமானத்தை அங்கிருந்தகிராமப் பகுதி ஒன்றில் தரையிறக்கும்படிக் கட்டளையிட்டது. அவர்கள் கூறியபடி விமானி, விமானத்தைத் தரையிறக்கியபின் அக்கும்பல் தங்களிடமிருந்தபைகளுடன் தப்பித்துச் சென்று விட்டது. அவர்கள் வைத்திருந்த பைகளில் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

8 பேரும் தப்பித்துச் சென்ற பின் விமானப் பைலட், விமானத்தை அருகிலுள்ள லோன்டிரினா விமான நிலையத்திற்குக் கொணடு சென்றார்.

விமானத்திலிருந்த, ஊழியர்கள், பயணிகள் உள்பட 72 பேரும் பத்திரமாக உள்ளனர். விமானத்தைக் கடத்தியவர்கள் எங்கே ஏறினார்கள் என்பதுதெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+