தாயகம்" திரும்பினார் மகேந்திர செளத்ரி

Subscribe to Oneindia Tamil

ரோதக் (ஹரியானா):

பிஜி நாட்டின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி, இந்தியாவில் ஹரியானா மாநிலம், ரோதக் மாவட்டத்தில் உள்ளதனது சொந்த ஊருக்கு வந்தார்.

மகேந்திர சவுத்ரிக்கு ரோதக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இந்தவிருதைப் பெற புதன்கிழமை இரவு இந்தியா வந்தார் மகேந்திர சவுத்ரி. வியாழக்கிழமை காலை வந்த அவருக்குபல்கலைக் கழகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தான் வீட்டில் இருப்பது போல் உணர்வதாக வரவேற்பு நிகழ்ச்சியில் மகேந்திர சவுத்ரி பேசும்போது குறிப்பிட்டார்.

பிஜி நாட்டின் இந்திய வம்சாவளிப் பிரதமராக இருந்தவர் மகேந்திர சவுத்ரி. கடந்த மே 19-ம் தேதி பிஜி நாட்டைச்சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நடந்த புரட்சியின்போது மகேந்திர சவுத்ரியின் ஆட்சிகவிழ்க்கப்பட்டது. புரட்சிப் படையினரால் 54 நாட்கள் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டவர் மகேந்திர சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், இந்திய பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டம் பெற அவர் இந்தியா வந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் பேசுகையில், பிஜியில் தற்போது நிலவும்நிலைமை பற்றியும், பிஜியில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றியும் இந்தியஅரசிடம் எடுத்துரைப்பதற்காகவும் நான் இந்தியாவுக்கு வந்துள்ளேன் என்றார் அவர்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

எனக்கு உற்சாகமான வரவேற்பு அளித்த ஹரியானா மாநில மக்களுக்கும், பல்கலைக ஊழியர்களுக்கும் நான் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். ஹரியானாவுடன் எனக்கு குடும்ப ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஆழமானதொடர்பு உள்ளது.

பல்கலைக் கழகம் அளிக்கும் டாக்டர் பட்டத்தை அடக்கத்துடனும் பொறுப்புடனும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்பல்கலைக் கழகமும், ஹரியானா மாநில மக்களும் பிஜியில் வாழும் அனைத்து ஜனநாயக அமைப்பில் நம்பிக்கைகொண்ட மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் மகேந்திர சவுத்ரி.

இவ் விழாவில் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் பிரதமர் தேவிலால், ஆளுநர் பாபுபரமானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+