பி.எஸ்.எல்.வி. மூலம் நிலாவுக்கு விண்கலம் செலுத்த முடியும்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நிலாவுக்கு ஆளில்லாத விண்கலத்தைச் செலுத்த முடியும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் ஆய்வில்தெரிய வந்துள்ளதாக மத்திய விண்வெளித் துறை அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தார்.
லோக்சபாவில் வசுந்தரா ராஜே கூறுகையில், நிலாவுக்கு ஆளில்லாத விண்கலத்தை செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஆனால் எப்போது செலுத்தப்படும்என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்தால், அதன் மூலம் நிலாவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்ப முடியும். இது தொடர்பாகமேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
நிலாவுக்கு ராக்கெட் செலுத்துவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்றார் அமைச்சர் வசுந்தரா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications