தமிழக அரசின் செல்லப் பிள்ளை
அனைத்து வகையான தொழில்துறைகளுமே நிறைந்திருந்தாலும் இப்போது தமிழக அரசின் செல்லப் பிள்ளைகள் சாப்ட்வேரும்,எலெக்ட்ரானிக்ஸ் தொழிலும் தான்.
இந்தியாவின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் உற்பத்தியில் 32 சதவீதம் தமிழகத்தில இருந்து தான் வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில்தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பூரண சாப்ட்வேர் கல்வி என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம் என்கிறது தமிழ்நாடு அரசு.
இந்தியாவில் சாப்ட்வேர் தொழில் தொடங்க வரும் உலகின் முன்னணி ஐ.டி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கத் தான் முன்னுரிமைதருகின்றனர் என்கிறது தேசிய சாப்ட்வேர் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் (NASSCOM).
சாப்ட்வேர் என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டுக்குள் எந்தத் தொழிலதிபராவது நுழைந்தால் ராஜ உபசாரம் தான்.வழக்கமாக அரசு அலுவலகங்களில் டேபிள் டேபிளாக ஊர்ந்து சென்று பைல்கள் தூங்குவது தான் வழக்கம். ஆனால், ஐ.டி.தொழில் தொடர்பான பைல்கள் பறக்கின்றன.
அவை அதிகமாக டேபிள்களை தேய்ப்பதும் இல்லை. 2 அல்லது 3 நிலைகளில் உயர் உயர் அதிகாரிகளை அடைந்து விடுகிறது. அதுதொடர்பான முடிவும் உடனடியாக எடுக்கப்பட்டுவிடுகிறது. பெரும்பாலும் சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ் தான். பைல் சேஸிங்வேலையெல்லாம் தேவையில்லை.
நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால், சிறந்த அடிப்படைக்கட்டமைப்பு வசதியும், தொழில்துறைக்கு ஏற்ற சூழ்நிலையும் நிலவும் மாநிலங்களை நோக்கித் தான் அன்னிய முதலீட்டாளர்கள்செல்வர்.
இந்த வகையில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்கிறது பிரிட்டிஷ் டிரேட் இன்டர்நேசனல் அமைப்பு. வெளிநாட்டு நேரடி மூலதனத்தை(foreign direct investment) ஈர்ப்பதில் அனைத்து மாநிலங்களையும் மூக்கில் விரலை வைக்கச் செய்திருக்கிறது தமிழ்நாடு. இந்தமூலதனம் வரும் ஆண்டுகளில் பல மடங்கு பெருகும். குறிப்பாக சாப்ட்வேர் துறையில் மூலதனம் மிகக் குறிப்பிடத்தக்க அளவில்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நேஷனல் அப்ளைட் எக்கனாமிக் ரிசர்ச் கவுன்சில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழகம்கொடுத்து வரும் சலுகைகள் போல நாட்டில் வேறு எந்த மாநிலமும் சலுகைகள் தரவில்லை என்கிறது.
மாநில அரசுக் கழகமான டிட்கோ தனியார் துறையுடன் இணைந்து சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைக்கவும் முன் வந்திருக்கிறது.தரமணியில் டிட்கோவும், மற்றொரு அரசு நிறுவனமான எல்காட்டும் இணைந்து உலகத் தரம் வாய்ந்த சாப்ட்வேர் பூங்காவைகட்டியுள்ளன.
சென்னை தரமணியில் மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் ஹைடெக் பூங்கா தமிழகத்தை வானம் எட்டவைக்கும். 1.16 மில்லியன் சதுர அடி பரப்பில் உயர்ந்து நிற்கிறது இந்த டைடல் பார்க். டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் நேரடிக்கண்காணிப்பில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
12 மாடிகள், 2 அண்டர் கிரவுண்ட் பார்க்கிங், 650 சீட்களுடன் கூடிய மாநாட்டு அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய 3செமினார் அறைகள், 2 பெரிய ரெஸ்டாரெண்ட்கள், ஏடிஎம் வசதியுடன் வங்கிகள், உடல்பயிற்சி மையம், வி.எஸ்.என்.எல், டெலிகாம்துறையின் அலுவலகங்கள், 5 நாட்கள் மின்சாரம் இல்லாவிட்டாலும் டைடல் பார்க் எந்த சிரமமும் இன்றி இயங்கும் வகையிலானபேக் அப் மின் வசதி, ராட்சத ஜெனரேட்டர்கள் என மிரட்டுகிறார்கள்.
அன்லிமிடட் பேண்ட் விட்த் தகவல் தொடர்பு இணைப்புகள்:
டெரஸ்ட்ரியல் இணைப்புகள், மைக்ரோவேவ் இணைப்புகள், நேரடி செயற்கைக் கோள் இணைப்புகள் உள்ளதால் தகவல்பரிமாற்றத்தை எந்தத் தடையும் இல்லாமல் செய்ய முடியும்.
சென்னையில் ஒருவர் சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினால், 30 முதல் 40 சதவீதம் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது ஒருஆய்வு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications