குமாரமங்கலம் சுகவீனம் ... திருச்சியில் பரபரப்பு
திருச்சி:
மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்திற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதுஎன்ற செய்தியால் அவரது தொகுதியான திருச்சியில் பரபரப்பு நிலவியது.
ரங்கராஜன் குமாரமங்கலம் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது திருச்சிநாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவருக்கு உடல் நலக்குறைவுஏற்பட்டுள்ளது என்ற செய்தி பரவியவுடன், திருச்சி நகரில் உள்ள அனைத்துபத்திரிக்கை அலுவலகங்களுக்கும் ரங்கராஜன் குமாரமங்கலம் உடல் நிலை குறித்துவிசாரணை செய்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் புதன்கிழமையன்று அரைநாள் விடுமுறை அறிவித்தன. பெரும்பாலான கடைகளும் மூடப்படடிருந்தன.
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் ஆதரவாளர்களும், பாரதீய ஜனதா கட்சித்தொண்டர்களும் அமைச்சரின் அலுவலகம் அருகே குழுமி அமைச்சரின் உடல்நிலைகுறித்து விசாரித்த வண்ணம் இருந்தனர்.
நகரம் முழுவதும் போலீஸ் பாசுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில்கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications