வந்தார்கள் ... சென்றார்கள் ...
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
இலங்கையைச் சேர்ந்த 33 பேர் இந்திய சுதந்திர தினத்திற்கு முன்பு ஹோட்டலில்தங்கியிருந்ததை போலீஸாருக்குத் தெரிவிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த 33 பேர்ஆகஸ்ட் 12-ம் தேதி வந்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள்தங்கினர். அடுத்த நாள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸுக்கு ஹோட்டல் உரிமையாளர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.ஆகஸ்ட் 14-ம் தேதிதான் அவர்கள் வந்து சென்ற தகவலை போலீஸாரிடம் ஹோட்டல்உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மர்மமாக வந்து சென்ற33 இலங்கைவாசிகள் யார் என்பது குறித்துதற்போது விசாரணை நடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications