பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 29 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் சுமார் 29 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடந்த கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துமூலம் அளித்த பதில்:
மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் 29 தீவிரவாதிகள் பயிற்சிமுகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் தவிர நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதற்கான ஆதாரங்கள்கிடைத்துள்ளன என்றார் பாஞ்சா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications