விசாரணைக்குப் "பயந்து" விக்ரமசிங்கே உதவியாளர் ஓட்டம்
கொழும்பு:
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேயின் உதவியாளர் போதி ரனசிங்கே, போலீஸ் சிஐடி விசாரணைக்குப் "பயந்து" நாட்டை விட்டுஓடிவிட்டார்.
சமீப காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய இரண்டாவது ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, கொழும்பு நகரின் துணை மேயரும், கட்சியின் மத்திய அமைப்பாளருமான முகம்மது மாரூஃப் கடந்த வாரம் நாட்டை விட்டுவெளியேறிவிட்டார். இவர் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
1988-89-ம் ஆண்டில் படாலண்டா முகாமில் நடந்த கொடுமைகள் தொடர்பாக முன்னாள் போலீஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பெரிஸ் சிஐடி போலீஸாரிடம்வாக்குமூலம் கொடுத்தார்.
வெளிநாட்டில் இருந்த பெரிஸ், திடீரென்று இலங்கை வந்து படாலண்டா முகாமில் நடந்த கொடுமைகள் குறித்த சிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேயின் உதவியாளர் போதி ரனசிங்கேயின் பெயரையும்அவர் குறிப்பிட்டிருநதார். இது தவிர மேலும் சிலரது பெயர்களையும் பெரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிஐடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 1994-ம் ஆண்டில் தனது பணிகளை வேகமாக முடிக்கும்படியும் விரைவில் நாட்டை விட்டுவெளியேறும்படியும் சிலர் தன்னை வற்புறுத்தியதாக பெரிஸ் விரிவாகக் கூறியுள்ளார்.
பெரிஸ் தனது ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தவர்களில் ஒருவரான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு நகர அமைப்பாளர் மிலிண்டா மோரகோடாவிடம் சிஐடிபோலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
இந் நிலையில், தன்னிடமும் சிஐடி போலீஸார் விசாரணை நடத்தக்கூடும் என்ற பயத்தில் ரனில் விக்ரமசிங்கேயின் உதவியாளர் போதி ரனசிங்கே, இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் இரு முக்கிய பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்ரனில் விக்ரமசிங்கே தர்மசங்கடமான நிலையில் உள்ளார்.
விசாரணைக்குப் பயந்துதான் இருவரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று செய்திகள் வெளியாகிவருவது அவருக்கு மேலும் பிரச்சினைகளைஅதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பெரிஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்திரபிரேமா என்பவரை சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளசந்திரபிரேமா ஐக்கிய தேசிய கட்சியின் ஆலோசகர் என்று கூறப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தனது புதிய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தைநிறைவேற்ற அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
இதற்கு முக்கிய காரணமாக முக்கிய எதிர்க்கட்சியா ஐக்கிய தேசிய கட்சி இப் புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாததே ஆகும்.இதையடுத்து 1994-ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின்போது நடந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இலங்கை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில், படாலண்டா முகாமில் நடந்த கொடுமைகள் குறித்தும், அந்த முகாமில்இருந்து சிலர் தப்பிச் சென்றது குறித்தும் முன்னாள் போலீஸ் கண்காணிப்பாளர் பெரிஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
இலங்கை அரசின் இந் நடவடிக்கையை, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் முகத்தில் சேற்றை வாரி இறைக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குறைகூறியுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications