தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவின் போது தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. உடனடியாகவிழாக் குழுவினர் தேசியக் கொடியை சரி செய்து ஏற்றினர்.
காரைக்காலில் உள்ள காமராஜர் சதுக்கத்தில் சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பாண்டிச்சேரி எம்.எல்.ஏ. நாஜீம்மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் பிராந்திய நிர்வாக அதிகாரி சாமுவேல் மாத்யூஸ் தேசியக் கொடியை ஏற்றினார்.
தேசியக் கொடி அரைக்கம்பத்திற்கு வந்த போது அது தலைகீழாக இருப்பதை உணர்ந்து பொதுமக்கள் கூச்சல் போட்டனர். அதிகாரி சாமுவேல்செய்வதறியாது திகைத்து நின்றார். உடனடியாக தேசியக் கொடி ஏற்றிய வேகத்தில் இறக்கப்பட்டு சரி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications