குமாரமங்கலம் சுகவீனம் ...கவலையில் பா.ஜ.க.
சென்னை:
சென்னை, பாரதீய ஜனதா கட்சி அலுவலகம். வருத்தத்திலும் சோகத்தின் பிடியிலும் இருக்கிறது. ஓயாத தொலைபேசி அழைப்புகள்.அனைத்துஅழைப்புகளுமே.. அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் எப்படியிருக்கிறார் என்பதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு அழைப்புகளுக்கும்.. அமைச்சர் நல்லபடியாக உடல் நலம் தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று மிக நிதானமாககலங்கிய கண்களோடு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜசிம்மன்.
எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது. நேற்றைவிட இன்று அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தபோதிலும், அபாய கட்டத்தைத்தாண்டவில்லை என்று நம்மிடம் சொல்லும்போதே கண்கலங்குகிறார் ராஜசிம்மன்.
இன்னும் அவரது உடம்புக்கு என்வென்று தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு காய்ச்சல் என்று மருத்துவமனை சென்றவர் சனிக்கிழமைகோமாவில் வீழ்ந்துவிட்டார். தொடர்ந்து செய்யும் பிரார்த்தனைதான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறோம் என்றார் ராஜசிம்மன்.
ரங்கராஜன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன் பதறிப் போய் கலங்கிப் போனாராம்அத்வானி. காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்திக்கு வலது கரமாக இருந்தவர்களில் ரங்கராஜன் குமாரமங்கலமும் ஒருவர்.
அப்போதே மிகப்பெரிய திறமைசாலி இவர். ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க.வுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பல முறைபா.ஜ.க.வுக்கு அழைத்தாராம் அத்வானி.
இல்லை அத்வானிஜி. ராஜீவ் என் நண்பர். எனக்கு இங்கு எந்தக் குறையும் இல்லை. நீங்களும் எனக்கு நண்பர்தான். ஆனால் நண்பரின் விருப்பத்தை இப்போதுஏற்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்றாராம் ரங்கராஜன் குமாரமங்கலம்.
மிக அழகாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் பழகுகின்ற ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பண்பைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறாராம்அத்வானி. அரசியல் வேறு, நட்பு வேறு - இந்த இரண்டுக்கும் இடையே இருக்கின்ற மிக மெல்லிய கோடிழையை மிகக் கவனமாக கையாண்ட விவேகிரங்கராஜன் குமாரமங்கலம்.
அத்வானிக்கு இந்த மனிதரிடம் கவர்ந்த விஷயம் இதுதான் என்று சொல்லிச்சொல்லி கலங்குகிறார்கள் தமிழக பா.க.வினர்.
ராஜீவ் காந்தி இறந்த பிறகு சோர்ந்து போன குமாரமங்கலத்தை அத்வானிதான்..வாருங்கள் இன்னும் நாட்டுக்கு நீங்கள் நிறைய செய்யவேண்டியிருக்கிறது என்று மூன்று வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு அழைத்து வந்தார்.
மருத்துவமனையில் ரங்கராஜன் குமாரமங்கலத்தைக் காணச் செல்லவேண்டும் என்ற நினைப்பில் முன்தினம் இரவு முழுவதும் அத்வானி தூங்கவேயில்லை.
திடீரென்று மறுநாள் காலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றவர்..கோமா நிலையில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தை நெடுநேரம்..எழுந்திருக்கமாட்டாரா..சிறு அசைவு காட்டமாட்டாரா என்று மிகக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாராம். கிட்டதட்ட எட்டரை மணிநேரம்மருத்துவமனையிலேயே இருந்தாராம் அத்வானி.
அடுத்து பிரதமர் வாஜ்பாய் வந்து பார்க்க, கண்கலங்கி விட்டாராம் அத்வானி. வாஜ்பாயும் கண்கலங்கி இருக்கிறார். மிக அருமையான, திறமையானமனிதர். எவருமே குறைசொல்ல முடியாத மனிதர் என்றால் அது ரங்கராஜன் குமாரமங்கலம் அவர் திரும்ப நமக்கு கிடைப்பார் என்று ஆறுதல்சொன்னாராம் பிரதமர் வாஜ்பாய்.
உத்திரப் பிரதேசத்தில், மின்வாரியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டத்தைத் தனது திறமையால் மிக எளிதாகத் சமாளித்தவர் ரங்கராஜன்குமாரமங்கலம்.
டெல்லி தலைவர்கள் சற்று கவலையோடு அப் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டிருக்க, எதுவும் நடக்காது. இதில் குழப்பத்துக்கு இடமேயில்லை. நான் சரிசெய்கிறேன் என்று உ.பி. மின்வாரியப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம்.
இப்பொழுது அத்வானி, வாஜ்பாய் இருவருமே திறமையான மனிதர் , சீக்கிரம் எழுந்து நம்முடன் நடமாட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்என்று மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்களாம்.
தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் பிரசாதங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. சென்னை தி.நகர், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார்கோவில் பா.ஜ.க. அலுவலகத்தினருக்கு ராசியானது. அங்கு சிறப்பு வழிபாடு செய்து. விபூதி பிரசாதம் கொரியரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கர மடத்திலும் சிறப்பு பூஜை செய்து மடத்திலிருந்தே பிரசாதங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டு விட்டதாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் டெல்லியில் கவலை தோய்ந்த முகத்தோடு முகாமிட்டிருக்கின்றனர். தமிழகத்தின் பல இடங்களில்இருந்தும். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து பிரசாதங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications