சோனியாவைச் சந்திக்க பத்திரிகையாளர்களுக்கு தடை
ஹைதராபாத்:
ஹைதராபாத் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தங்கியிருந்த விருந்தினர்மாளிகைக்குச் செல்ல முயன்ற பத்திரிகையாளர்கள், டிவி கேமரா மேன்கள் மற்றும்பத்திரிகைப் புகைப்படக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத் வந்த சோனியா காந்தி,அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவருடன் வந்துள்ளசிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் (எஸ்.பி.ஜி.) விருந்தினர் மாளிகை முழுவதும்காவலுக்கு நின்றிருந்தனர்.
சோனியா காந்தியைப் பார்ப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள்,புகைப்படக்காரர்கள் விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அனுமதிஇல்லாததால் அவர்களை அனுமதிக்க எஸ்.பி.ஜி. வீரர்கள் மறுத்து விட்டனர். பலமுறைகோரியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அப்போது ஒரு காங்கிரஸ் தலைவர் பத்திரிகையாளர்களை உள்ளே அழைத்துச் செல்லமுயன்றார். ஆனால் அவரைத் தடுத்து நிறுத்திய எஸ்.பி.ஜி. வீரர்கள் அவரைகுண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்து விட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications