ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை மீட்க பிரிட்டன் உதவிக்கரம்
லண்டன்:
நடுக்கடலில் மூழ்கியுள்ள ரஷிய அணு நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள 130 பயணிகளைக் காப்பாற்ற பிரிட்டன் உதவிசெய்ய முன்வந்துள்ளது.
திங்கள்கிழமை ரஷிய கடற்படைக்குச் சொந்தமான அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெரண்ட் கடல் பகுதியில்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கடலில் புதைந்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் நீர் மூழ்கிக் கப்பல்சேதமுற்று, நீரில் மூழ்கியது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிஇது.
கப்பலில் அதிகாரிகள் உள்பட 130 பேர் உள்ளனர். கப்பலில் ரேடியோ தொடர்பு முழுவதும் அறுந்து விட்டது.இதனால் கப்பலில் உள்ளவர்களுக்கு, வெளியுலகுடனான தொடர்பு அறுந்து விட்டது. இவர்களை மீட்பதற்காகரஷிய கடற்படை கப்பல்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால் பெரண்ட் பகுதியில் கடல் அலைகள்வேகமாக இருப்பதால் மீட்புக் கப்பல்களால் அங்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் ரஷ்ய அணுநீர்மூழ்கிக் கப்பலை மீட்பதற்கு உதவி செய்யத் தயார் என்று பிரிட்டன் கூறியுள்ளது.அதன்படி, சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை நார்வே துறைமுகம் டோராண்டியம் பகுதிக்கு அனுப்பி அங்கிருந்துரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி ஆலன் ஹோஸ்கின் கூறுகையில், ரஷ்யாவில் நடுக்கடலில் சிக்கியுள்ளகப்பலை மீட்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதற்காக சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நார்வேக்கு அனுப்பப்படும்.
பின்னர் இந்த நீர்மூழ்கிக் கப்பல் நார்வே துறைமுகம் டோரான்டோரியம் பகுதியிலிருந்து, ரஷ்யாவுக்குச் செல்லும்.இங்கிருந்து ரஷ்யாவுக்குச் செல்ல குறைந்தது 50 மணி நேரமாவது ஆகும். எப்படியும் சனிக்கிழமை மதியத்திற்குள்இந்த மீட்புக் கப்பல் ரஷ்யாவிலுள்ள பெரண்ட் கடல்பகுதியை அடையும் என்றார்.
பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இந்த விபத்து குறித்துக் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் ரஷ்யாவில் இதுவரைஏற்பட்டதேயில்லை. விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதுவிபத்துக்குள்ளாகி விட்டது என்றனர்.
பிரிட்டனிலிருந்து சென்றுள்ள மீட்பு கப்பலில் உள்ள மீட்புக்குழுவினர் கடலின் ஆழம், நீர்மூழ்கிக் கப்பல்மூழ்கியுள்ள இடம் ஆகியவற்றைக் கண்டு பிடிப்பதற்காக ரிமோட் கன்ட்ரோல் மற்றும் வேறு சிலஉபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். மீட்புக் குழுவினருடன், டாக்டர்களும் சென்றுள்ளனர்.
மேலும் இரண்டு குண்டுவெடிப்பு:
இதற்கிடையே நீர்மூழ்கிக் கப்பல் உள்ளே மேலும் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ள பகுதிக்கு அருகே அமெரிக்காவின் இரண்டு நீர்மூழ்கி மற்றும் ஒருகண்காணிப்புக் கப்பல் நிலைகொண்டுள்ளன. இந்தக் கப்பலில் உள்ள கருவியில் குண்டுவெடிப்புக்கள்பதிவாகியுள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குண்டுவெடிப்பின் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. மொத்தம் 130 பேர் கப்பலில் இருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள்இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications