2 பள்ளி மாணவிகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

தமிழகத்தின் பெரம்பலூரிலுள்ள ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் புதன்கிழமை மாலை விஷம் குடித்து இறந்தனர்.

ஜெயசுதா (15), பத்மா (15) ஆகிய மாணவிகள் இரண்டு பேரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் 9 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் இணைபிரியாததோழிகள். வழக்கம் போல் இருவரும் டியுஷனுக்குச் சென்று விட்டு வீடு திரும்பியதும் வாந்தியெடுக்க ஆரம்பித்தனர்.

இருவரும் உடனடியாக டாக்டர் கே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பத்மாஇறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் ஜெயசுதா இறந்தார்.

இவர்கள் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டனர் என்ற காரணம் தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+