உலகிலேயே சிறந்த "பலசரக்குக்" கடையில் இந்திய காபி விற்பனை
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகிலேயே சிறந்ததும், மதிப்புமிக்கதுமான ஹாரோட்ஸ் என்ற "பலசரக்குக்" கடையில் இந்திய காப்பி விற்பனைசெய்யப்படுகிறது.
ஹாரோட்ஸ் கடை தனது விற்பனையை 1849-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது இந்திய தேயிலையும் விற்கப்பட்டது. 1849-ம் ஆண்டு விற்பயைைத்தொடங்கியதன் நினைவாக அந்த தேயிலைக்கு பிளென்ட்-49 என்று பெயரிடப்பட்டது.
இப்போது தேயிலையைத் தொடர்ந்து இரண்டாவது இந்தியப் பொருளாக ஹாரோட்ஸ் கடையில் இந்திய காபி விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய காபிவிற்பனை தொடக்க விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இவ் விழாவில் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் நரேஷ்வர் தயால், துணைத் தூதர் ஹர்தீப் பூரி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மான்சூன் மலபார், மைசூர் நக்கெட்ஸ், கூர்க் எக்ஸோடிகா என்ற மூன்று சுவைகளில் இந்திய காபி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய காபி நன்குவிற்பனை ஆகும் என்று எதிர்பார்ப்பதாக ஹாரோட்ஸ் கடையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இந்திய அரிசியை விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஹாரோட்ஸ் கடையில் இந்திய தேயிலைக்குஅதிக வரவேற்பு உள்ளது.
அஸ்ஸாம், டார்ஜிலிங், சிக்கிம், நீல்கிரி, காங்ரா ஆகிய 5 விதமான சுவைகளில் இந்திய தேயிலை அங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications