மாற்றான் தோட்டத்து மல்லிகையைக் கேட்டவருக்கு பைன்"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அடுத்தவர் மனைவியை தன் மனைவி என்று சொந்தம் கொண்டாடி நீதிமன்றம்போனவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ்கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாம் பிரபா என்ற பெண்ணைதிருமணம் செய்ததாகவும், கோவை சிவானந்த காலனியில் இருவரும் மூன்று மாதம்வாழ்ந்ததாகவும், இச் சூழ்நிலையில் பிரபாவை அவரது தந்தை வலுக்கட்டாயமாகஅழைத்துச் சென்று விட்டதகாவும் கூறியிருந்தார்.

சட்ட விரோதமாக தனது மனைவி பிரபாவை அவரது தந்தை வீட்டில் அடைத்துவைத்துள்ளார். அவரை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் ஜெகதீசன்,பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பிரபா என்ற பெண் ஏற்கனவேதிருமணம் ஆனவர் என்று தெரிந்தது.

கணிணி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற அவருக்கும். எம்.சி.ஏ. படித்ததேவராஜ் என்பவருக்க திருமணம் முடிந்து விட்டது. ஆனால் நாகராஜ் தன்னைதிருமணம் செய்து கொள்ளும்படி பிரபாவிடம் வற்புறுத்தி வந்துள்ளது தெரிந்தது.

அதற்கு பிரபா மறுக்கவே இப்படியொரு வழக்கை நாகராஜ் தாக்கல் செய்தார் என்பதும்தெரிந்தது.

இதையடுத்து நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும்பிரபாவின் செல்வாக்கையும், அவரது தந்தையின் மதிப்பையும் குறைக்கும் வகையில்நாகராஜ் புகார் கொடுத்துள்ளார். நீதித்துறையை நாகராஜ் தவறாக பயன்படுத்தும்வகையில் வழக்கு தொடுத்துள்ளார். எனவே, அவரை சும்மா விட்டுவிட முடியாது.அவர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அதில் 15 ஆயிரம் ரூபாயை வழக்கு செலவுக்காக பெண்ணின் தந்தைக்கும், 10ஆயிரம் ரூபாய் அரசுக்கும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+