பல லட்சம் மோசடி .. பலே" லேடி டாக்டர் கைது
சென்னை:
அமெரிக்க நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடிசெய்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர்,மேற்கு மாம்பலம், மயிலாப்பூர், பாடி ஆகிய இடங்களில் ஒருபெண் தன்னை டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அமெரிக்க நிதிநிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்துள்ளார்.
இதற்காக பொதுமக்களிடம் லட்சக் கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார் என்றும், ஒருபகுதியில் மக்களை ஏமாற்றிவிட்டு அடுத்த இடத்திற்கு சென்று விடுகிறார் என்றும்போலீசுக்கு புகார் வந்தது.
அதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். கடைசியாகமேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அப்பெண் போலீசிடம் பிடிபட்டார்.விசாரணையில் அப்பெண் பெயர் பத்மினி என்றும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும்தெரிந்தது.
8-ம் வகுப்பு வரை படித்த இவர் கணவர் நாராயண நாயரை விவாகரத்து செய்துவிட்டுபிழைப்புக்காக சென்னை வந்துள்ளார். வந்த இடத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் கொடுத்த யோசனையின் பேரில் திருச்சி பொன்நகரில் ஒரு வாடகை வீட்டில் ஒருநிதி நிறுவனத்தை ஆரம்பித்தனர். பத்மினி பைனான்ஸ் மற்றும் சுக்ரா பைனான்ஸ் அன்ட்கன்சல்டன்சி என்று பெயரும் வைத்தனர்.
பல மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்து வசூல் வேட்டை ஆடினர். சில லட்சங்கள்சேர்ந்ததும் சென்னைக்குத் தாவினர். இங்கு கைவரிசையை காட்டிக் கொண்டிருக்கும் போதுபோலீசிடம் சிக்கினர். அவரிடமிருந்து 4 லட்சம் ரூபாய் பணம், போலி ரசீதுகள், கடன்படிவங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications