சர்ச்சுகளில் குண்டு வெடிப்பு - விமானப் படை அதிகாரி கைது
பெங்களூர்:
கர்நாடக, ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் சர்ச்சுகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்.) அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கர்நாடக டிஜிபி தினகர் கூறியதாவது:
இந்திய விமானப் படையில் ஜூனியர் வாரன்ட் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் 50 வயதான சயத் ஹசன்-உர்-சாமா. இவருக்கும் கர்நாடகா,ஆந்திரா, கோவா மாநிலங்களில் நடந்த சர்ச் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள சில அமைப்புகளுக்கு அவர் உளவாளியாகச் செயல்பட்டுள்ளார். இவர், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களான ராணுவஅலுவலகங்கள், ரயில்வே பாலங்கள் போன்றவை குறித்து அந்த அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தனக்கும் தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை சயத் ஹசன்-உர்-ஸாமா விசாரணையின்போது ஒப்புக் கொண்டுவிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்த ஸாமாவின் சொந்த ஊர் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்கோன் என்ற ஊராகும். அங்கு ஸாமா கைதுசெய்யப்பட்டார்.
இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பங்கள் தொடர்பாக ஸாமா உள்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தீன்தார்சன்னபஸவேஷ்வரா அஞ்சுமான் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார் தினகர்.
ஜூன் 8, ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் கர்நாடகத்தில் பெங்களூர், வாடி, ஹூப்ளி மற்றும் கோவா, ஆந்திர மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications