கோவை கலவரம் ...11 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
கோவை கலவரத்தின்போது 4 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மறுநாள் கோவையில் பெரும்கலவரம் ஏற்பட்டது.
இக் கலவரத்தின்போது காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த ஒரு பிரிவினர் மீது தாக்குதல் நடந்தது.
உருட்டுக் கட்டைகளாலும், பிற ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட அவர்களில் ஆரிப், ஆசிப், ஹபீப் ரஹ்மான், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச் செயலாளர் அதிரடி ஆனந்தன், நாகராஜ், உள்பட 14 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
கோவை இரண்டாவது முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் நீதிபதி பூபாலன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச் செயலாளர் அதிரடி ஆனந்தன், நாகராஜ் ஆகியோர்விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனையுடன் பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடியதற்காக 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இருதண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications