முற்றுகிறது அ.தி.முக. - காங்கிரஸ் மோதல்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவனையும் கடுமையாக விமர்சித்து அ.தி.மு.க.சார்பில் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும்,சோனியாவை போல் சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்பவர் நாட்டில் யாருமே இருக்கமுடியாது என்றும் அந்த அறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக முதல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கர்நாடக, தமிழக முதல்வர்களின் கையாலாகத்தனத்தைகண்டித்து, அதற்காக அவர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.
அதை கடுமையாக ஆட்சேபித்து மறுநாள் பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், கர்நாடக முதல்வரை பதவி விலகச் சொல்வது சிறு பிள்ளைத்தனமானதுஎன்று ஜெயலலிதாவை கண்டித்திருந்தார்.
அதற்கு சூடான பதிலடி கொடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து வியாழக் கிழமை அறிக்கைவெளி வந்தது. அக்கட்சியின் அவைத் தலைவர் காளிமுத்து வெளியிட்ட அந்த அறிக்கை,இரு கட்சிக்கும் இடையிலான கூட்டணி உறவை முறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து காளிமுத்து வெளியிட்ட அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அரை வேக்காடு ஒன்று தலைவராகி இருக்கிறது. பதவிப்பொறுப்புக்கு வந்த நாள் முதலே இளங்கோவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி வார்டு ஒன்றுக்கு வேட்பாளரைநிறுத்தி குதர்க்கம் பேசியது முதல் இன்று வரை அவர் கூட்டணிக் கட்சிகளிடம் எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாத குழந்தையாக உள்ளார்.
யாருக்கும் கொத்தடிமையாக இருக்க மாட்டோம் என்று கிறுக்குத்தனமாக உளறினார்.தமிழ்நாடு ழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வீரராக பவனி வர நினைத்து விலாசம்இழந்த இளங்கோவன் படுதோல்வி அடைந்த பிறகு, அ.தி.மு.க. வோடு "பிரண்ட்லி மேட்ச்விளையாடியதாக பித்து குளித்தனமாக உளறினார்.
உலக மகா கிரிமினலின் கடத்தல் நாடகத்தை உரிய சாதுரியத்தோடு முடிவுக்கு கொண்டுவராமல் அவன் இழுத்த இழுப்புக் கெல்லாம் பணிந்து போகும் மாநில அரசுகளின்கையாலாகாப் போக்கை ஜெயலலிதா கண்டித்தால் இளங்கோவனுக்கு எரிகிறது.
இரண்டு மாநில முதல்வர்களை விலகச் சொல்வது சிறுபிள்ளைத் தனமானது என்று திவாரிகட்சிக்கு ஓடி வாழப்பாக்கு கைத்தடியாகத் தேய்ந்து காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கடைசிஅத்தியாயம் எழுத வந்திருக்கும் இளங்கோவன் புலம்புகிறார்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்காக மட்டுமின்றி கருணாநிதிக்காகவும் இளங்கோவன்வக்காலத்து வாங்கப் புறப்பட்டிருப்பது, அவர் ஒரு ஞானசூனியம் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
அ.தி.மு.க.வோடு கூட்டணி என்று கூறிக் கொண்டே தமிழக காங்கிரஸ் தலைவராகபொறுப்பேற்ற நாள் முதல் வீணான விமர்சனங்களைச் செய்வதற்கு பின்னணியில் யாரோஇளங்கோவனை தாங்கிப் பிடிக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது.
கருணாநிதியைப் பாராட்டுவதற்குத் தயாராகி விட்ட இளங்கோவன் புத்தி கெட்டுப்புலம்புகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் 150 பேராக இருந்த கும்பலை 5 பேராக குறைத்து,வீரப்பன் ஆதிக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
130க்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்ற வீரப்பனை உயிருக்குப் பயந்து ஓட்டம்பிடித்து காடுகளில் நாயாய் அலைய வைத்தவர்தான் ஜெயலலிதா.
வீரப்பனை அடியோடு கருவறுக்கும் தருணத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தான்வீரப்பனைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம். அடிக்கடி கட்சி மாறி அங்கும்இங்கும் ஓடும் இளங்கோவன் இதை அறிய வாய்ப்பு இல்லை.
1996ல் வீரப்பன் கருணாநிதிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்தால்அவனுக்கு ஆக்கம், ஊக்கம் கொடுத்து கருணாநிதி வளர்த்தார். அதன் விளைவு தான்இன்றைக்கு அந்த மகாபாதகன் ராஜ்குமார் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்.அந்தக் கொடுமைக்காரன் ஆட்டிப் படைக்கும் எல்லா நிலையிலும் இரண்டு மாநிலஅரசுகளும் செயல்படுவதைக் கண்டிப்பது தவறா?
கொலை மற்றும் கொள்ளைக்காரர்களோடு அரசியல் தலைவர்கள் பாவகரமான கூட்டணிஅமைப்பது கவலையைத் தருகிறது என்று ஜனாதிபதி கண்டித்து இருக்கிறாரே, அதைசிறுபிள்ளைத் தனம் என்று இளங்கோவன் விமர்சிப்பாரா?
நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று கூறும் நக்கீரன் பரம்பரையில்வந்தவர் எங்கள் தலைவி.
வீரப்பனுக்கு அடிபணிந்து தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் இருந்த 5 பேரைவிடுதலை செய்த கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறஅதே நேரத்தில் 51 தடா கைதிகளை விடுதலை செய்யும் கிருஷ்ணாவை பதவி விலகச்சொன்னதில் என்ன தவறு?
கிருஷ்ணாவை பதவி விலகச் செய்யும் அதிகாரம் சோனியாவுக்குத் தான் உண்டென்றுஆர்ப்பரிக்கும் இளங்கோவன் தமிழ்நாட்டில் காங்கிரசோடு கூட்டணி உண்டா இல்லையாஎன்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு தான் உண்டு என்பதை உணராமல்இருக்கிறார்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் வந்திருக்கும் இளங்கோவனின்செயகைகள் காங்கிரசை தமிழ்நாட்டில் அழிக்கப் பிறந்த சைத்தான் என்பதைதெளிவுபடுத்துகிறது.
1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் வாங்கமுடியாமல் இருண்டு போனகாங்கிரசுக்கு 1999ல் உயிர் கொடுத்தவர் ஜெயலலிதா தானே?
பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, சிவகங்கை என்று மூன்று மக்களவை இடங்கள் காங்கிரசுக்குகிடைப்பதற்கு ஜெயலலிதா தான் காரணம் என்று நல்ல காங்கிரஸ்காரர்கள் அறிவார்கள்.நன்றி உணர்வோடும் இருப்பார்கள். தீய செடியாக விளைந்திருக்கும் இளங்கோவனுக்குஇது தெரிய வாய்ப்பு இல்லை.
1999 தேர்தலுக்கு யார் காரணம் என்பதை காங்கிரசை அழிக்க வந்திருக்கும் இளங்கோவன்அறிவாரா? பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அற்புதமான ஆட்சிமாற்றத்துக்கு வழி வகுத்தவர் ஜெயலலிதா அல்லவா?
அறிவு முதிர்ச்சியோடு தங்கத் தாம்பாளத்தில் காங்கிரசுக்கு அந்த பொன்னான வாய்ப்பைஅளித்தவர் ஜெயலலிதா அல்லவா? அந்த பொன்னான வாய்ப்பை சீர்குலைத்தவர்,சிதைத்தவர், குரங்கு கையில் பூமாலையாக பிய்த்துப் போட்டவர் சோனியா அல்லவா?
சிறுபான்மையாக இருந்து கொண்டு பிற கட்சிகளை ஆட்சியில் பங்கேற்கச் செய்யமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டவர் சோனியாகாந்தி என்பதை நாடே அறியுமே. அன்றைக்கு ஆட்சியில் பங்கு வேண்டாம் என்றுசொல்லி முதிர்ச்சியோடு நடந்து கொண்டவர் ஜெயலலிதா அல்லவா.
எங்களைப் போல எல்லாக் கட்சிகளும் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டு வெளியில்இருந்து ஆதரவு தர வேண்டும் என்ற கருத்தைப் போல குழந்தைத் தனம் உலகில் எங்காவதுஉண்டா?
காங்கிரசை தமிழ்நாட்டில் சவப் பெட்டியில் வைத்து ஆணி அடிக்கும் அற்புதமானவேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இளங்கோவனுக்கு என் அனுதாபங்கள்என்று காளிமுத்து அறிக்கையில் சீறியுள்ளார்.












Click it and Unblock the Notifications