மீண்டும் ஈவ்-டீசிங் ... கண்டித்த பெண் கொலை
தஞ்சாவூர்:
பள்ளி மாணவிகளை கேலி செய்ததால் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதில் மாணவியை கேலி செய்தவர்களைக் கண்டித்து மோதலில் இறங்கிய பெண்கொல்லப்பட்டார்.
ஈவ்-டீசிங் கொடுமை சமீபகாலமாக தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. சிலவருடங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சரிகா ஷா என்ற மாணவி ஈவ்-டீசிங்செய்த வெறித்தனத்தால் விபத்துக்குள்ளாகி இறந்தார்.
சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி தீபா ஈவ்-டீசிங் காரணமாகதற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஈவ்-டீசிங் பலிவியாழக்கிழமை யன்று நடந்துள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ளது திருக்கருகாவூர். இங்குள்ள அரிஜனக் காலனியைச் சேர்ந்தமாணவிகள் சிலர் பள்ளி முடிந்து அக்ரகாரத் தெருவில் வரும்போது அங்குள்ளஇளைஞர்கள் சிலர் அந்தப் பெண்களை கேலி செய்தனர்.
வீட்டுக்குச் சென்று அந்த பெண்கள் தங்களை கேலி செய்தது குறித்து பெற்றோரிடம்தெரிவித்தனர். மாணவிகளின் உறவினர்கள் கேலி செய்தவர்களை கண்டித்தனர்.இதனால் இரு பிரிவினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும்கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் அரிஜனக் காலனியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவிவேலம்மாள் தலையில் கடப்பாரையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயேஉயிரழந்தார். பலர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்த போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜி (25),கோவிந்தராஜ் (25) ஆகிய இரண்டுபேரையும் கைது செய்துள்ளனர். இந்தசம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications