பலத்த மழையால் வீரப்பனை கோபால் சந்திப்பதில் தாமதம்
சென்னை:
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால் சந்தனக் கடத்தல்வீரப்பனை நக்கீரன் கோபால் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வீரப்பனை கோபால் சனிக்கிழமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றுநக்கீரன் பத்திரிகை துணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்தார்.
வீரப்பனின் புதிய கோரிக்கைகளுக்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பதில்களைஎடுத்துக் கொண்டு நக்கீரன் கோபால் மீண்டும் வீரப்பனைச் சந்திக்க காட்டுப்பகுதிக்குச்சென்றுள்ளார்.
கோரிக்கைகளைத் தெரிவித்தபோது அடுத்த 8 நாட்களுக்குள் பதில் அனுப்பவேண்டும்என்று வீரப்பன் கூறியிருந்தார். அந்த காலக்கெடு சனிக்கிழமையுடன் முடிவடைகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், வீரப்பனை கோபால் இன்னும் சந்திக்கவில்லை. சத்தியமங்கலம்காட்டுப்பகுதியில் தங்கியிருக்கும் கோபாலுக்கு இன்னும் வீரப்பனிடமிருந்து தகவல்ஏதும் வரவில்லை.
அது தவிர, காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கோபாலால்மேற்கொண்டு காட்டுக்குள் செல்ல முடியவில்லை. அதனால், வீரப்பனை நக்கீரன்கோபால் சந்திப்பது தாமதப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு வீரப்பனை கோபால் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும்குறைவு. வீரப்பனை கோபால் சனிக்கிழமை நிச்சயம் சந்திப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கோபாலும், வீரப்பனை சனிக்கிழமை நிச்சயம் சந்திப்பேன்என்று கூறியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை கடத்திச் சென்று அவர்களைபிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார் சந்தனக் கடத்தல் வீரப்பன். அவர்களைவிடுவிக்க 14 கோரிக்கைகளை அவர் விடுத்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications