திமுகவினர் அராஜகத்தைத் தடுக்க நல்லகண்ணு கோரிக்கை
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினரைஉடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணுகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரஅலுவலகம் ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு சில சமூக விரோதிகளால் தீவைத்துக்கொளுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலுள்ள மேஜை, நாற்காலிகள் மற்றும் ஆவணங்களும்தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
கட்சிஅலுவலகத்தைத் தாக்கியவர்கள் திமுகவினர் என்று தெரிய வருகிறது. கொரடாச்சேரிவட்டாரத்தில் திமுகவினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இவர்களை, மாவட்ட திமுகதலைமைதான் தூண்டி வருவதாகத் தெரிகிறது.
கொராடாச்சேரி வட்டாரத்தில் திமுகவினர் நடத்தி வரும் அராஜகத்தை இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications