மேட்ச் பிக்ஸிங்: சிபிஐ இடைக்கால அறிக்கை செப்டம்பரில் தயாராகும்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எஸ். தீன்ஷா தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்தபதில்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் மீதுமேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பல வீரர்கள் மற்றும்அதிகாரிகள் நேரடியாக சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திபல ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் குறித்து வருமான வரித் துறையினரும், சிபிஐ அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க சிபிஐக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருந்தாலும். முதற்கட்ட விசாரணை முடிந்துசிபிஐயின் இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்பட நாட்டில் உள்ள விளையாட்டு தொடர்பான அனைத்து அமைப்புகளின் மத்திய விளையாட்டுஅமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான புதிய விளையாட்டுக் கொள்கை, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில்தாக்கல் செய்யப்படும் என்றார் தீன்ஷா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications