ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெ. மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
தமிழக அரசின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்றதுதொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வெள்ளிக்கிழமைகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் செப்டம்பர் 4-ஆம் தேதி ஆஜாராகும்படி ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
உரம் தயாரிக்கும் தொழிற்சாலையான ஸ்பிக் நிறுவனத்தில் தமிழக அரசுக்கும் கணிசமானபங்குகள் இருந்தன. இந்த பங்குகளை தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் வைத்திருந்தது.
அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த பங்குகள் குறைந்த விலைக்கு ஸ்பிக் நிறுவனத்தலைவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,இதனால் அரசுக்கு 28.29 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்தது.
இந்த பிரச்சனையை ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமிதான் கிளப்பினார். சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அரசுச்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1997-ம் ஆண்டு தமிழக அரசுக்கு 28 கோடியே 29 லட்சரூபாய் நஷ்ட ஈடாக அரசுக்கு ஸ்பிக் நிறுவனத் தலைவர்கள் எம்.ஏ. சிதம்பரம், எம்.சி.முத்தையா ஆகியோர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கின்விசாரணையை சி.பி.ஐ. தொடர்ந்து நடத்தலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்து வந்தது. ஆனால், கடந்த வாரம் தனிநீதிமன்றத்தில் ஆஜரான சுப்ரமண்யம்சாமி சும்மா இருக்கவில்லை. இவ்வழக்கு விசாரணைஆமை வேகத்தில் நடக்கிறது. அதை வேகப்படுத்த வேண்டும் என்று நீதிபதியிடம்முறையிட்டார். அதன்படி வழக்கை துரிதப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதன்படிவழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக கவர்னரிடம் சி.பி.ஐ. அனுமதிகோரியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில் துறை செயலாளர் சி.ராமச்சந்திரன் ,ஸ்பிக் துணைத் தலைவர் ஏ.சி முத்தையா ஆகியோர் மீது வெள்ளிக்கிழமை காலைமுதலாவது தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த எம்.ஏ. சிதம்பரம் இப்போது உயிரோடுஇல்லை என்பதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
குற்றப்பத்திரிக்கையில் 27 அரசு சாட்சிகளும், 34 ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன், செப்டம்பர்மாதம் 4-ம் தேதி ஜெயலிலதா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications