காங், அதிமுக மோதலால் 3-வது அணி வரும் என்கிறார் சுவாமி
மதுரை:
வீரப்பன் பிரச்சினை தொடர்பாக அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், தமிழகத்தில் மூன்றாவது அணிஅமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இரு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அக்கட்சிகளிடையே பிளவை அதிகரிக்கவே உதவும்.இது மூன்றாவது அணி அமைவதற்கு வசதியாக இருக்கும். இந்த அணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைவராக இருப்பார்.
திமுக ஆட்சி மக்களிடம் கெட்ட பெயரைச் சம்பாதித்துள்ளது. மூன்றாவது அணி அமைந்தால் அந்த அணிக்குத்தான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை.
ஜெயலலிதா உள்பட அக்கட்சியின் பல தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் தீர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவேஅக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தடா கைதிகளை விடுவிக்கக் கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளது சரியானதே. இந்தப் பிரச்சினைதொடர்பாக கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதற்காக அவரைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின்அறிக்கை தவறு.
விடுதலைப் புலிகளின் அனுதாபியான காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் தூண்டுதலின் பேரில்தான் இளங்கோவன் இப்படி அறிக்கை விடுகிறார் என்றார் சுவாமி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications