உழவர் சந்தை மூலம் விவசாயிகளுக்கு ரூ. 12 கோடி லாபம்
கோவை:
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தை மூலம் 98 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனதமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூரில் 57-வது உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் 78 கடைகள் உள்ளன.இது கோவையில் இரண்டாவது சந்தையாகும். பொள்ளாச்சி மற்றும் உடுமலைப் பேட்டையிலும் தலா ஒரு சந்தைதிறக்கப்பட்டது.
சிங்காநல்லூரில் உழவர் சந்தையைத் திறந்து வைத்து, வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்பேசியதாவது:
தமிழகம் முழுவதிலும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 100 உழவர்சந்தைகள் திறக்கப்படும். இதுவரை திறக்கப்பட்டுள்ள 56 உழவர் சந்தைகள் மூலமாக 98 ஆயிரத்து 68 மெட்ரிக் டன்காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 64 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில்,விவசாயிகள் 12 கோடியே 79 லட்ச ரூபாய் லாபமாகப் பெற்றுள்ளனர். பொதுமக்களுக்கு 19 கோடியே 16 லட்சரூபாய் லாபமாகக் கிடைத்துள்ளது.
கோவை மாநகராட்சிக் கழிவுகளைப் பயன்படுத்தி கனிம உரங்களைத் தயாரிக்க ரூ. 4 கோடி ரூபாயை அரசுநிதியுதவியாக அளிக்கும். பாண்டியாறு-புன்னம்புழாத் திட்டத்தில் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் முடிவு ஏற்படும் என்றார் அமைச்சர்.
விழாவில், மாசுக் கட்டுப்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் அரசுஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications