திடீரென இந்தியா வந்த யாஸர் அராபத்
டெல்லி:
பாலஸ்தீன அதிபர் யாஸ்ர் அராபத் திடீர் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை இந்தியா வந்தார்.
உடனடியாக அவர் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி பாலஸ்தீனத்தை தனிசுதந்திர நாடாக பிரகடனம் செய்ய அராபத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு நாடுகளின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு அவர் பயணம்மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் ஆதரவையும் பெறுவதற்காக அவர் இந்த திடீர் டெல்லி பயணத்தைமேற்கொண்டார்.
பங்களாதேஷில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நியைத்தில் இந்தியவெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளும், பிற துறைகளின் அதிகாரிகளும், பல்வேறு அரபு நாடுகளின்தூதுவர்களும் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து நேராக பிரதமர் வாஜ்பாயின் இல்லத்துக்கு அராபத் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குவாஜ்பாயுடன் மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார்.
ஜெருசலத்தை விட்டுத் தர இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தயாராக இல்லை. இதனால், இஸ்ரேல் பிரதமர் இகுட்பராக்குடன் அராபத், கேம்ப் டேவிட்டில் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. கைவிடப்பட்டஇந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மேற்கு ஆசியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர்டென்னிஸ் ராஸ் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், என்ன நடந்தாலும் சரி செப்டம்பர் 13 ம் தேதி பாலஸ்தீனத்தை முழுச் சுதந்திரம் பெற்ற தனி நாடாகஅறிவிக்கப் போவதாக அராபத் அறிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்துக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா மிகத் தீவிர ஆர்வம் காட்டி வந்தது.இதற்காக இஸ்ரேலுடனான உறவைக் கூட இந்தியா துண்டித்துத் கொண்டது.
இப்போது இஸ்ரேலுடன் இந்தியா நெருங்கி வந்தாலும் பாலஸ்தீன சுதந்திரத்துக்கும், மேற்காசியாவில் அமைதிநிலவவும் இந்தியா முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications