துபாயிலிருந்து ரூ. 44 லட்சம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்தவர் கைது
மும்பை:
துபாயிலிருந்து மும்பை வந்த விமானப் பயணியிடமிருந்து ரூ. 44.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கல்ஃப் ஏர் விமானம் சனிக்கிழமை காலை வந்தது.
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி மட்டும் தன்னிடம் சோதனை செய்வதற்குஏதுமில்லை என்று கூறிவிட்டு சோதனை செய்யும் இடத்தை விட்டு உடனே செல்ல முயன்றார்.
அந் நபரின் இச் செய்கையால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை நடத்தினர். அவரது பேண்ட் பையில் செல்போன்கவர்கள் இருந்தன. அவற்றைச் சோதனை செய்தபோது அந்த கவர்களுக்குள் 9.67 கிலோ எடையுள்ள 83 தங்கக் கட்டிகள் இருந்தன.
சர்வதேச சந்தையின் அதன் மதிப்பு ரூ. 44.24 லட்சமாகும். விசாரணையில் அவர் பெயர் சையத் அலி பாஷா (45) என்றும், இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும்தெரியவந்தது.
துபாயில் சமையல்காரராகப் பணியாற்றி வரும் இவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும்போது இப்படி தங்கத்தைக் கடத்தி வருவார் என்றும்இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 14 முறை துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications