வீட்டுவசதி வாரிய வீடு வாங்கியவர்களுக்கு விரைவில் கிரையப்பத்திரம்
சென்னை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள் வாங்கியவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கிரையப் பத்திரங்கள் கிடைக்க சிறப்பு முகாம்கள்நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அதன் ஒதுக்கீடுதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கதிட்டமிட்டுள்ளது.
அதன்படி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப்பத்திரம் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்காக ஏற்கனவே நடைமுறையிலிருந்த காலக்கெடு மற்றும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டப் பகுதிகளில் முழுத்தொகையை செலுத்தி வாரிய நடைமுறை விதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், உடனடியாககிரையப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் வாரிய ஒதுக்கீடுதாரர்கள்எளிதாக கிரையப் பத்திரம் பெற்று பயன்அடைந்து வருகின்றனர்.
எனவே, இச்சிறப்பு முகாமை தொடர்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டு வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில்வீடுகள், மனைகள் வாங்கியுள்ள ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 21.8.2000 முதல் 30.8.2000 வரை பெறப்பட்டு வாரிய நிபந்தனைகள்அனைத்தையும் பூர்த்தி செய்த ஒதுக்கீடுதாரர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் கிரையப்பத்திரம் வழங்கப்படும்.
11.9.2000 அன்று வேலூர் மற்றும் சேலம் வீட்டு வசதி பிரிவுகள், 12.9.2000 அன்று ஈரோடு மற்றும் ஓசூர் வீட்டு வசதி பிரிவுகள்,13.9.2000 அன்று கோவை வீட்டு வசதி பிரிவு, சிறப்புக் கோட்டம் -2 கோவை, சிறப்புக்கோட்டம் 6, கோவை மற்றும் திருவண்ணாமலைமாவட்டம்.
கிரையப்பத்திரம் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கோட்டம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களிலும்சமர்ப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர், சம்பந்தப்பட்ட கோட்ட அரசு அலுவலகங்களிலுள்ள அறிவிப்புப் பலகை மூலமோ அல்லதுசம்பந்தப்பட்ட மேலாளரை (ஒதுக்கீடு சேவை மற்றும் விற்பனை) நேரில் சந்தித்தோ அறிந்து கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications