பாலஸ்தீனம் வளைந்து கொடுத்தால்தான் அமைதிப் பேச்சு என்கிறது இஸ்ரேல்
ஜெருசலம்:
மேற்காசியப் பகுதியில் அமைதி ஏற்படுவது பாலஸ்தீனத்தின் கையில்தான் உள்ளதுஎன்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் காஸா பகுதியில் உள்ள நிலப்பரப்பு தொடர்பாக பாலஸ்தீனத்துக்கும்,இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால், இதுவரை பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில் அமெரிக்காவில் கடந்த மாதம்நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது.
இந் நிலையில், மேற்காசியாவில் அமைதி ஏற்படுவது பாலஸ்தீனத்தின் கையில்தான்உள்ளது.
பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு சற்று வளைந்துகொடுத்தால்தான் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று இஸ்ரேலின்தாற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்லோமோ பென்-அமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டாலும், அது மேலும்தொடர வேண்டுமானால் அதற்கு பாலஸ்தீனம் வளைந்து கொடுக்கவேண்டும் என்றார்அவர்.
ஆனால், மேற்காசியப் பகுதிப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாததற்கு இஸ்ரேல்தான்காரணம் என்று பாலஸ்தீனம் குறை கூறியுள்ளது.
இதற்கிடையே மேற்காசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்காவின்மத்திய கிழக்கு ஆசியப் பகுதிக்கான தூதர் டென்னிஸ் ராஸ் ஈடுபட்டள்ளார்.
அவர் இஸ்ரேல் பிரதமர் ஈத் முபாரக் மற்றும் பாலஸ்தீனத்தின் மூத்த செய்தித்தொடர்பாளர் சாயிப் எரேகட் இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.
விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லைஎன்று இரு தரப்பினரும் அவரிடம் கூறிவிட்டனர்.
ஆனால், செப்டம்பர் 13-ம் தேதிக்குள் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைதொடங்குவதற்கான முயற்சிகளை டென்னிஸ் ராஸ் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீனதலைவர் யாசர் அராபத்தை ஞாயிற்றுக்கிழமை அவர் சந்திக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications