ஜெயலலிதாவால் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்து - வீரப்பன் மனைவி
சென்னை:
அதிரடிப் படையை அனுப்பி வீரப்பனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதால், வீரப்பனிடம் பிணைக் கைதியாக உள்ள நடிகர்ராஜ்குமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேட்டூரில் அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போலீஸார், கிராம மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர்.
இதுகுறித்து எனது கணவர் தொலைக்காட்சிக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளித்தபோது, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார்
அதனால்தான் ஜெயலலிதா இப்போது வீரப்பனை சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நான் கண்டிக்கிறேன்.
இப்படி சொன்னால் எனது கணவர் கோபமடைந்து ராஜ்குமார் உயிருக்கு ஊறு விளைவிப்பார் என்ற நோக்கத்தோடுதான் ஜெயலலிதா இவ்வாறுகூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் கடத்தப்பட்டவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஜெயலலிதாவின் அறிக்கைமுட்டுக்கட்டையாக இருக்கும்.
நான் எனது கணவரை கேட்டுக் கொள்வது எல்லாம், தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை ஏற்று மனம் திருந்தி வாழ வேண்டும்.கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
நான் என் கணவரைப் போலவே தினம் ஓய்வு கிடைக்கும் போது பகவத் கீதை படித்து வருகிறேன் என்றார் முத்துலட்சுமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications