எப்போது வேண்டுமானாலும் ராஜ்குமார் வரலாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரும் பிறரும் கடத்தப்பட்டு 19 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும்எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது

கர்நாடக டி.ஜி.பி.தினகர் இதுகுறித்து இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,இன்னும் இரண்டு நாட்களில் ராஜ்குமார் உள்பட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றுநம்புகிறோம்.

அரசுத் தூதராக சென்றுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டுக்குள் நுழைந்திருப்பார் என்றுநம்புகிறோம். விரைவில் அவர் நடிகர் ராஜ்குமார் மற்றும் பிறருடன் திரும்புவார் என்றுஎதிர்பார்க்கிறோம்.

வீரப்பனைச் சமாதானப்படுத்துவது இனிமேல் கஷ்டமாக இருக்காது என்று நம்புகிறோம் என்றார்.

கர்நாடகத் தரப்பில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்மாறானகருத்து உள்ளது. சேலத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,ராஜ்குமார் உள்ளிட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பதில் வீரப்பன் மேலும் தாமதம் செய்வான்என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் இரு மாநில அரசுகளும் தனது கோரிக்கையை முழுமையாக ஏற்கவேண்டும் என்று வீரப்பன் நினைக்கிறான். ஆனால் தற்போது வீரப்பனுடைய கோரிக்கைகள்முழுவதுமாக ஏற்கப்படவில்லை. எனவே ராஜ்குமார் விடுதலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதுஎன்றார் அவர்.

முன்னதாக ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வீரப்பன் கெடு விதித்திருந்தான். அதற்குள் மைசூர் சிறையில்தடா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழர்கள், தமிழ சிறைகளில் உள்ள ஐந்து தமிழ்த்தீவிரவாதிகள் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வீரப்பன்விதித்திருந்தான்.

இவர்களில் 51 தடா கைதிகளை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை 19-ம்தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

(வீரப்பன் இருப்பிடம் தெரியும்?)

இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு முன் தான் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடவீரப்பன் விரும்புவதாக தெரிகிறது என்று தமிழக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மூத்த போலீஸ்அதிகாரி ஒருவர் கூறுகையில், வீரப்பன் எங்கு இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியும். நாட்கள்செல்லச் செல்ல வீரப்பன் பதற்றமடைந்து வருகிறான்.

ராஜ்குமார் உள்ளிட்ட பிணைக் கைதிகளை ஒப்படைத்து விட்டு வருமாறு தனது சீடர்களிடம் கூறி விட்டுத்தான் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விட வீரப்பன் முடிவு செய்துள்ளான். பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு வந்த பிறகு தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறும் தனது சீடர்களுக்கு அவன்உத்தரவிட்டுள்ளான் என்றார் அவர்.

தமிழக எல்லைக்குள் இருக்கும் தலைமலை காட்டுக்குள்தான் வீரப்பன் ஒளிந்திருப்பதாக தமிழக போலீஸ்நம்புகிறது. காட்டின் உட் பகுதிக்குள் வீரப்பன் நுழையவில்லை என்றும் போலீஸ் வட்டாரத்தில்பேசப்படுகிறது.

(ராஜ்குமாரை மறந்த மக்கள்:)

இதற்கிடையே ராஜ்குமார் கடத்தலால் பதற்றமடைந்த பெங்களூர் நகர் இப்போது வழக்கமானநிலைக்கு வந்து விட்டது. சுரேஷ் என்ற தொழிலதிபர் கூறுகையில், ராஜ்குமாரை மக்கள் மறந்துவிட்டனர். தங்களது வேலைகளில் இப்போது மூழ்கி விட்டனர்.

பெங்களூரில் வன்முறை ஏற்பட்டபோது சில தமிழர்கள் இங்கிருந்து வெளியேறினர். அவர்கள் இன்னும்திரும்ப வரவில்லை என்று பெங்களூரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ராஜ்குமார் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் தினசரிபிரார்த்தனைகள், பூஜைகள் செய்து வருகின்றனர். அவரது வீட்டுக்குத் தினசரி ஏராளமான ரசிகர்கள்சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+