கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்புமங்கியது

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

ஆர்க்டிக் கடல் பகுதியில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் 118 பேரையும்உயிருடன் வாய்ப்பு மங்கிவிட்டது. நிலைமை அபாயகட்டத்தை அடைந்ததுமட்டுமல்லாமல், கை மீறிப்போய்விட்டது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆர்க்டிக் கடல் பகுதியில் ரோந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய கடற்படையின் நீர்மூழ்கிக்கப்பல் திடீரென்று கடலில் மூழ்கியது. கப்பலுக்குள் 118 பேர் இருந்தனர்.

எதிரே ஏதோ ஒரு பெரிய, வலுவான பொருளுடன் மோதியதால் விபத்துக்குள்ளாகிஇந்த நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், அக் கப்பல்மோதிய பொருள் எது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து விபத்துக்குள்ளான நீர் மூழ்கிக் கப்பலுக்குள் இருக்கும் 118ஊழியர்களையும் உயிருடன் மீட்கும் பணியில் ரஷ்ய கடற்படையினரின் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவியாக வெளிநாட்டு மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்குவிரைந்துள்ளனர். கப்பலுக்குள் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகாகக்கூறப்படுகிறது.

இந் நிலையில், கப்பலுக்குள் இருப்பவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புமங்கிவிட்டது. நிலைமை அபாயகட்டத்தை அடைந்துவிட்டது என்று ரஷ்யகடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு பிரிட்டனின் மீட்புப் படையினர் விரைந்தாலும் நிலைமை கைமீறிப்போய்விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு பிரிட்டன் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை மாலைதான்சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலுடன் மோதித்தான் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்விபத்துக்குள்ளானது என்று வெளியாகியுள்ள செய்தியை ரஷ்ய கடற்படை அதிகாரிகள்மறுத்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+