ஈவ்-டீசிங்கில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
டெல்லி:
ஈவ்-டீசிங்கில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்தியஉள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சவாமி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டகேள்விகளுக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
2000--ம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 1617 ஈவ் டீசிங் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே மற்ற மாநிலங்களில் பதிவான வழக்குகளை விடஇது அதிகம்.
கடந்த ஆண்டு 2825 வழக்குகளுடன் ஆந்திரம் முதலிடம் பெற்றது. அதற்கு முந்தையஆண்டில் 2571 வழக்குகளுடன் உத்திரப் பிரதேசம் முலிடம் பெற்றது.
ஈவ் டீசிங்கைப் போல விபசார வழக்குகளிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.2000-ம் ஆண்டில் இதுவரை 2160 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில்மொத்தம் 5879 வழக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடப்பு ஆண்டில் இதுவரை மொத்தம் 5760வவக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 12,151 வழக்குகளும், அதற்குமுந்தைய ஆண்டில் 11,201 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
நாட்டிலேயே கற்பழிப்புகள் அதிகம் நடைபெறும் மாநிலம் மத்தியப் பிரதேசம்தான்.அங்கு ஆண்டுக்கு சராசரியாக 3000 கற்பழிப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்தில்சராசரியாக 350 கற்பழிப்புகள் நடைபெறுகின்றன.
பெண்களுக்கு எதிராக மிக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில்மகாராஷ்டிரமும், அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications