51 தடா கைதிகளின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தடா கைதிகளின் ஜாமீன் மனுக்கள்மீதான விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட கர்நாடகஅதிரடிப்படையினர், வீரப்பனுக்கு உதவியதாக 51 பேரைக் கைது செய்துகர்நாடகத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் 12 பெண்களும் அடங்குவர். இவர்கள் மீது தடா சட்டம் உள்பட பலபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன்கடத்திச் சென்றான். கடத்தியவர்களை விடுவிக்க 14 கோரிக்கைகளை வீரப்பன்விடுத்துள்ளான்.

தன் பொருட்டு கைது செய்யப்பட்டு கர்நாடகச் சிறையில் உள்ள 51 தடாகைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதும் அதில் ஒரு கோரிக்கையாகும்.

வீரப்பனின் கோரிக்கையை ஏற்று 51 தடா கைதிகளையும் விடுவிக்க கர்நாடக அரசுமுடிவு செய்து அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது. தடா நீதிமன்றத்தில் இந்த 51 பேர்மீது இருந்த வழக்கையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மேலும் 51 தடா கைதிகளின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வது என்றும்,அதை அரசு சார்பில் எதிர்ப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மைசூரில் உள்ள முதன்மை மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன்மனுக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அதற்காக 51 பேரும் பலத்தகாவலுடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிஒத்திவைத்து நீதிபதி ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து ராஜ்குமார் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகியுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+