For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பதில் உள்ள சிக்கல்கள்...

By Staff
Google Oneindia Tamil News

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. இன்னும் வீரப்பன் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இரண்டாவது முறையாகக் காட்டுக்குள் சென்றுள்ள நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனின் ஆட்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றுகூறுகிறார்கள்.

தமிழ் தீவிரவாதிகள் ஐந்து பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்று. அரசுத் தரப்பில் இருந்து இன்னமும்தீவிரவாதிகளை ஜாமீனில் வெளியிடவே முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் ஜாமீனில் வருவதை தீவிரவாதிகள் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான்தீவிரவாதிகளின் குரலாக இருக்கிறது.

தங்கள் மீதுள்ள வழக்குகளில் இருந்து முழுவதுமாக தாங்கள் விடுவிக்கப்பட்டால் தான் நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவோம் என்கின்றனர். தமிழ்தீவிரவாதிகளான வெங்கடேசன், பொன்னிவளவன், மணிகண்டன், முத்துக்குமார், சத்திமூர்த்தி ஆகியோர்.

வீரப்பனின் கோரிக்கையின் அடிப்படையில் வெளியே வரும் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்லஇப்போது நாங்களே அழைத்து காட்டுக்குள் அவர்களை விடுவிக்கின்ற நிலையை என்னவென்று சொல்வது? அப்படி அவர்களை காட்டுக்குள் விட்டால்மறுபடியும் அவர்களை பிடிப்பதற்கு காவல்துறையில் பல கஷ்டங்கள் ஏற்படும்.

உயிர்பலிகள் கூட எதிர்காலத்தில் நடக்கலாம். இவர்கள் காட்டிற்குள் சென்று என்ன செய்ய போகிறார்கள் எதிர்காலத் திட்டமென்ன என்றுஎதுவுமே தெரியாமல் விருந்துக்கு அனுப்புவது மாதிரி அனுப்பி வைப்பதும் ஆபத்து.

எனவே நிபந்தனை ஜாமீனிலோ அல்லது நிபந்தனைகளற்ற ஜாமீனிலோ அவர்களை அனுப்பி வைப்பதுதான் நல்லது என்று நினைக்கிறார்கள் காவல்துறைஅதிகாரிகள்.

நீதிமன்றத்திலும் ஒட்டுமொத்தமாக வழக்குகளில் இருந்து விடுவிப்பது என்பது பின்பு பல கேள்விகளுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறது தமிழகஅரசு.

ஆனால் தீவிரவாதிகளின் தரப்பில் பிடிவாதம் இன்னும் நீங்கவில்லை. தீவிரவாதிகளுக்கு ஜாமீன் என்பது தனி நபர் ஜாமீன்கள், ரொக்கஜாமீன் இரண்டும்காட்டித்தான் ஜாமீன் பெற முடியும்.

இதற்காக தீவிரவாதிகளின் வழக்கறிஞர்களிடமும் தீவிரவாதிகளின் உறவினர்களிடமும் காவல்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

இந்த சமயத்தில் காட்டிற்குச் செல்லும் தீவிரவாதிகள் வீரப்பனை சந்தித்து விட்டு திரும்பியெல்லாம் வரமாட்டார்கள். இது காவல் துறைக்கேநன்றாக தெரியும். அடுத்த தீவிரவாதிகளை பிடிப்பது என்பதும் குதிரைக்கொம்பான விஷயம்.

இந்த நிலையில் உறவினர்களையும் வழக்கறிஞர்களையும் சமாதானப்படுத்தி தீவிரவாதிகளை ஜாமீனில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்அதிகாரிகள்.

தீவிரவாதிகள் வெளியே சென்று விட்டால் அவ்வளவுதான். இப்போது சிரித்துப் பேசும் காவல்துறை அதிகாரிகள் ராஜ்குமார் வெளியே வந்து நிலைமைகட்டுக்குள் வந்த பிறகு தீவிரவாதிகளுக்காக தனி நபர் ஜாமீன் கொடுத்த நபர்களை பிடித்து கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.

தேவைப்பட்டால் சட்டத்திற்கு முன்பும் அவர்களை காட்டி வழக்கை சரிகட்டிக் கொள்வார்கள். இவ்வளவு சிக்கல்கள் இருக்க ஜாமீன் ஜாமீன் என்றுதமிழக அரசு முயற்சித்துக் கொண்டிருப்பது ஏன் என்பது பற்றி தீவிரவாதிகளுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

ஆகையினால் தான் வழக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுவியுங்கள் என்று கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.

தீவிரவாதிகள், முழுவதுமாக வழக்கிலிருந்து விடுதலையாகி வருவதற்கு தீவிரவாதிகளுக்கு இதைத்தவிர வேறு நல்ல சந்தர்ப்பமும் கிடையாது என்பதுதீவிரவாதிகள் நன்கு அறிந்து தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

வீரப்பன் விடுத்த கெடு கடந்த 19 ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு நாள் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்காககாத்திருந்த நக்கீரன் கோபால் வீரப்பன் தூதரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X