தேர்தல் பிரசாரத்தில் கிரிமினல்கள் ஈடுபடுவதைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கை
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரபிரசாரத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.
தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க உள்ள நிலையில், கிரிமினல்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது தேர்தல் பிரசாரத்துக்குகிரிமினல்களைப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த உத்தரவை இலங்கை போலீஸ் ஐஜி லாக்கி கொடித்துவக்குபிறப்பித்துள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்படும் கிரிமினல்களை விடுவிக்கும்படி அரசியல்வாதிகள் சொன்னாலும் அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றார்கொடித்துவக்கு. வாக்குப் பதிவு அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் பல இடங்களில் கூடுதலான எண்ணிக்கையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரசாரத்தின்போது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி நடைபெற உல்ள பொதுத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4 ம் தேதி வரைநடைபெற உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications