For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் காங். எம்.எல்.ஏ.க்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

மின் கட்டண உயர்வை எதிர்த்து ஆந்திராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் உண்ணாவிரதம் திங்கள்கிழமை 4-வதுநாளாகத் தொடர்ந்தது.

ஆந்திராவில் மின் கட்டணத்தை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு சமீபத்தில் உயர்த்தியது.இதை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 78 எம்.எல்.ஏ.க்கள் ஆகட்ஸ் 18-ம் தேதி முதல்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மின் கட்டண உயர்வை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று கோரி இவர்கள் மேற்கொண்டுள்ள இந்தஉண்ணாவிரதத்தில் இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் 5 எம்.எல்.ஏ.க்கள் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் பல எம்.எல்.ஏ.க்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில்காணப்படுகின்றனர்.

இந் நிலையில் மேலும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை உண்ணாவிரத்தில் சேர்ந்து கொண்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X