நிதி நிறுவனம் மூலம் ரூ. 1.6 கோடியை சுருட்ட முயன்ற 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 1.6 கோடி ரூபாயைச் சுருட்ட முயன்ற 6 பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

கோவை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ராகவன் (85). இவர் கோவை புறநகர்ப் பகுதியில் ராமகிருஷ்ணா சிட் பன்ட்ஸ்என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந் நிறுவனத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்த 300 பேர், ரூ. 1.6 கோடி அளவுக்கு டெபாசிட் செய்திருந்தனர். இதில்,அனில் சாஸ்திரி என்பவர் ரூ. 4.5 லட்சம் டெபாசிட் செய்து மாதா மாதம் வட்டியைப் பெற்று வந்தார்.

டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பணத்தைக் கொடுக்க நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர். இதேபோல்ரூ. 6.5 லட்சம் டெபாசிட் செய்திருந்த சுரேஷ் பாபுவுக்கும் பணத்தைத் தர நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர். இப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவுவிசாரணை நடத்தினர். விசாரணையில் இந் நிறுவனத்தில் ரூ. 1.6 கோடி அளவுக்குப் பணம் டெபாசிட்செய்யப்பட்டிருந்ததும், அந்த பணத்தை வேறு வகைகளில் நிறுவனத்தினர் முதலீடு செய்திருந்தனர் என்றும்தெரியவந்தது.

மேலும், டெபாசிட் பணத்துக்கான வட்டியை மட்டும் சில காலம் கொடுத்துவிட்டு டெபாசிட் பணத்துடன்தலைமறைவாகிவிட நிறுவனத்தினர் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான கிருஷ்ணராஜன், ராமதாஸ், சுதாகரன், திலீப்குமார், ரமேஷ்குமார்,உபேந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர். நிதி நிறுவன நிறுவனரான ராகவன் தலைமறைவாகி விட்டார்.அவரைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+