"மக்கள் தமிழ் தேசம்" - கண்ணப்பனின் புதுக் கட்சி
சென்னை:
அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ""மக்கள் தமிழ் தேசம் என்ற புதுக்கட்சியை திங்கள்கிழமை தொடங்கினார்.
கட்சியின் நிறுவனத் தலைவராக தாம் இருக்கப் போவதாகவும், மற்ற நிர்வாகிகள் பட்டியலை அக்டோபர் 14-ம்தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அறிவிக்கப் போவதாகவும் சென்னையில்நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்.யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க ஆட்சியில் கொடி கட்டிப் பறந்த பிரபலங்களில் முன்னணியில்இருந்தவர்.
அதன் காரணமாக ஊழல் புகார்களுக்கு ஆளானவர். குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரிஇறக்குமதி செய்ததில் நடந்த ஊழல்கள் தொடர்பாக இவர் மீதும் வழக்கு உள்ளது.
வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும்அ.தி.மு.க.வுக்கு எதிராக போட்டி அ.தி.மு.க.வை, முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, அரங்கநாயகம்போன்றவர்களுடன் இணைந்து நடத்தினார்.
பின்னர் அந்த முகாமை கலைத்துக் கொண்டு அ.தி.மு.கவில் ஐக்கியமானார். ஆனால், பழைய முக்கியத்துவத்தைகண்ணப்பனுக்கு தர ஜெயலலிதா விரும்பவில்லை. கட்சியில் எந்த பொறுப்பும் தராமல் ஓரங்கட்டி வைத்தார். இதன்காரணமாக அதிருப்தியில் இருந்த கண்ணப்பன் புதுக் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தார்.
தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயங்களில் ஒன்றான யாதவர் இனத்தை பின்னணியாக கொண்டு ஒருதனிக் கட்சியை, பா.ம.க பாணியில் ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அதற்காக தமிழ்நாடு யாதவ மகாசபைதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் விளைவாக இப்போது "மக்கள் தமிழ் தேசம் என்ற புது அரசியல் கட்சியை அவர் ஆரம்பித்துள்ளார். புதுக்கட்சி தொடக்கம் பற்றி சென்னையில் திங்கள் கிழமை அவர் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அப்போதுஅவருடன் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும், இந்தியன் வங்கி முன்னாள் தலைவருமானகோபாலகிருஷ்ணன் இருந்தார்.
புதிய கட்சி பற்றி கண்ணப்பன் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி யாதவர்கள் உள்ளனர். இந்த இனத்தின் ஆதரவு இல்லாமல் யாரும் அரசியலில்வெற்றி பெற முடியாது.
எங்கள் கட்சிக்கு 40 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக தமிழ்நாடு முழுவதும்மாவட்டவாரியாக மாநாடுகள் நடத்தப் போகிறோம். முதல் மாநாடு வருகிற 25-ம் தேதி திருவண்ணாமலையில்தொடங்குகிறது.
அக்டோபர் 14ம் தேதி திருச்சியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும். அப்போது கட்சியின் கொள்கைத்திட்டங்கள், தலைவர் மற்றும் நிர்வாகிகள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள்.
அ.தி.மு.க.வை விட்டு விலகிய நான் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என்று சொல்லமுடியாது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுடனும் நட்புடன் இருப்போம். தேர்தல் நேரத்தில் கூட்டணிபற்றி முடிவு செய்வோம்.
தமிழ்நாடு யாதவ மகாசபை தொடர்ந்து சமுதாய அமைப்பாக தொடர்ந்து செயல்படும். எங்கள் கட்சி எல்லாசமுதாயத்தையும் உள்ளடக்கிய அரசியல் கட்சியாக செயல்படும் என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications