For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டால் கிரிக்கெட் விளையாட ஆயுட்காலத் தடை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடஆயுட்காலத் தடை விதிக்கப்படும்.

இது தொடர்பாக புதிய நெறிமுறை பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில்இயற்றப்பட்டது.

இது தவிர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரிய அதிகாரிகளுக்கான மேலும் பல புதியநெறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா நிருபர்களிடம்கூறியதாவது:

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள், கிரிக்கெட் வீரர்கள்உள்பட கிரிக்கெட் விளையாட்டில் தொடர்புடைய அனைவருக்கும் பொருந்தும்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சிபிஐ முன்னாள் இயக்குநர் மாதவன்நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது மற்றும்ஸ்பான்சர்ஷிப் விஷயங்களையும் அவர் கவனிப்பார்.

இப் புதிய நெறிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதில்திருத்தம் ஏதேனும் இருந்தால், செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் வாரியத்தின்பொதுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் வீரர்கள் கண்டிப்பாககலந்து கொள்ளவேண்டும். தலைமை மருத்துவ ஆலோசகராக ஆனந்த் ஜோஷிநியமிக்கப்பட்டுள்ளார்.

பிட்ச் ஆய்வாளராக கஸ்தூரிரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ளகிரிக்கெட் பிட்சுகளை அவர் உலகத் தரத்துக்கு இணையாக உயர்த்த நடவடிக்கைகள்எடுப்பார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள உடற்பயிற்சி சாதனங்களவாங்கப்படும். அவை ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும் வழங்கப்படும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் மும்பையில்அமைக்கப்படும். இந்திய கிரிக்கெட் கிளப் வளாகத்தில் சுமார் 10 ஆயிரம் முதல் 12ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த அலுவலகம் இருக்கும்.

ஓய்வுபெற்ற குறிப்பாக உடல் நலம் குன்றியுள்ள வீரர்களுக்கான மருத்துவ நல உதவித்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு ரூ. 3 லட்சம்வரை நிதி உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கபில்தேவ் கூறியுள்ளகுற்றச்சாட்டுகள் குறித்துஅவரிடம் விசாரிக்க எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சில தினங்களில் நான் டெல்லி செல்லவுள்ளேன். அப்போது கபில்தேவை நேரில்சந்தித்துப் பேசுவேன். கபில்தேவ் சாதாரணமாக பிரச்சினைக்குரிய வகையில்பேசமாட்டார்.

எளிதில் உணர்ச்சிவசப்படும் அவர், உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசியிருக்கலாம்.அவ்வாறு அவர் கூறியதற்கு என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் என்றார் முத்தையா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X