நான் தேர்தலில் வென்றால்...சந்திரிகா கொடுக்கும் வாக்குறுதி என்ன?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நான் தேர்தலில் வென்றால் எல்லா மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில்புதிய அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டு வருவேன் என்று இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.

அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கல்லேயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காபேசியதாவது:

இலங்கை நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில்எனது மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம உரிமைகிடைக்கும் வகையில் 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைமாற்றி புதிய சட்டம் கொண்டுவருவேன்.

இது தொடர்பாக நான் ஏற்கெனவே கொண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைநிராகரித்ததன் மூலம் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குஎந்த தார்மீக அதிகாரமும் இல்லை. இந்த நாட்டை ஆள எந்த உரிமையும் இல்லை.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வர எனது கட்சிக்கு ஆதரவளித்துஅமோக வெற்றியைத் தேடித் தரவேண்டும். இப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் தமிழர்கள் உள்ள இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின்உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

இலங்கையில் முஸ்லிம்களால் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், அவர்களுக்குஅநீதி இழைக்கப்பட்டும் வந்தால் அவர்கள் பிரபாகரனுடன் கைகோர்த்துக் கொண்டுதனி நாடு கேட்கப் புறப்பட்டு விடுவார்கள்.

மேலும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை நாம் செய்து கொடுக்கவில்லை என்றால்எல்லா தமிழர்களும் பிரபாகரனாவதை தடுக்கமுடியாது.

தேர்தலில் எனது மக்கள் கூட்டணி வெற்றி பெற்ற உடன் பழைய தேர்தல் முறைமாற்றப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு 3-க்கு இரண்டுபங்கு மெஜாரிட்டி கிடைக்காததற்கு இந்த தேர்தல் முறைதான் காரணம்.

நியாயமானதாகவும் எளிதாகவும் இருக்கும் வகையில் புதிய தேர்தல் முறையைக்கொண்டு வருவதற்கான மசோதா கொண்டு வரப்படும் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+