தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

நீலகிரியில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானியம் விரைவில் வழங்க தக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை 35 ஆயிரம்விவசாயிகளுக்கு 1.16 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா இது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியங்களை வழங்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கென கொச்சி தேயிலைக் கழகத்திலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளும்இணைந்து செயல்படுகின்றனர். மானியங்களை முறைப்படுத்தி வழங்க 50 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மானியங்களை வழங்க ஆண்டுக்கு 25 ஆயிரம் கிலோ உற்பத்தி செய்யக் கூடிய விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குறைந்த பட்சம்இத்தகைய தேயிலை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே மானியம் பெற தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்த வரும் பொருளாதார தாராளமயமாக்கலால் ஏற்படும் சர்வதேசப் போட்டியை சந்திக்க நீலகிரி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இதற்கென கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் மற்றும் ஏஜெண்டுகள் அடங்கிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்து 345ஏஜெண்டுகள் பங்குபெற்றனர். 300 பெரிய வர்த்தகர்களும் கலந்து கொண்டனர். நீலகிரியில் சிறுதேயிலை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களதுகுறைகளைக் கேட்க, மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்யவுள்ளேன் என்றார் சுப்ரியா சாகு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+