தீவிரமாகிறது ஆந்திர எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திராவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் உண்ணாவிரதம் தீவிரமடைந்துள்ளது.உண்ணாவிரதம் இருந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி 81எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.

இந்த 81 பேரில் 3 பேர் இடது சாரிக் கட்சியையும் மற்றவர்கள் காங்கிரஸ் கட்சியையும்சேர்ந்தவர்கள். கடந்த 5 நாட்களாக இவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதால்பலருடைய உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

திங்கள்கிழமை மாலை ரெட்டய்ய நாயக் என்ற எம்.எல்.ஏ.வும், செவ்வாய்க்கிழமைகாலை முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமானராஜலட்சுமியும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களையும்சேர்த்து உண்ணாவிரதம் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதால் அவர்களதுஉடல்நிலை மோசமடைந்துள்ளது. முதலுதவிக்காக உண்ணாவிரதம் நடைபெறும்இடத்தில் மருத்துவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவிஅருணாவும் உண்ணாவிரதத்தில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார்.

யு.என்,ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+